மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு!

Tuesday, March 8th, 2016

வளலாய் பகுதியில் மீளக்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை பிரதேச செயலகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வளலாய் பகுதியின், மேற்கு பகுதி கடந்த 2013ஆம் ஆண்டும் வடக்குப் பகுதி கடந்த 2015ஆம் ஆண்டும் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டது.

வளலாய் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு 660 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும், ஒரு சில குடும்பங்களே தமக்கு கிடைத்த தற்காலிக கூடாரங்களில் மீளக்குடியமர்ந்துள்ளன. ஏனைய குடும்பங்கள் வசதி வாய்ப்புக்கள் கருதி வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், தற்காலிக கூடாரங்களில் மீளக்குடியேறிய மக்களுக்கு, நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுப்பதற்கு கிராமஅலுவலர் ஊடாக தரவுகள் சேகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts: