வரட்சியின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிப்பு!

Saturday, April 1st, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலையினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வரட்சியுடனான காலநிலையினால் 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 66 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  வரட்சியுடனான காலநிலையினால் வட மாகாணத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 218 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 27 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வரட்சியினால் 28 ஆயிரத்து 333 குடும்பங்களைச் ​சேர்ந்த 98 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 20 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.  மேலும், வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரத்து 510 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  அத்துடன், மன்னார் மாவட்டத்தில் வரட்சியினால் 13 ஆயிரத்து 499 குடும்பங்களைச் ​சேர்ந்த 47 ஆயிரத்து 710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் வரட்சியினால் 39 ஆயிரத்து 48 குடும்பங்களைச் ​சேர்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 459 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.  இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 671 குடும்பங்களைச் ​சேர்ந்த 62 ஆயிரத்து 15 ​பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குருநாகல் மாவட்டத்தில் வரட்சியினால் 21 ஆயிரத்து 377 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேல் மாகாணத்தில் வரட்சியினால் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் வரட்சியினால் 48 ஆயிரத்து 847 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அநுராதபுரம் மாவட்டத்தில் மூவாயிரத்து 398 குடும்பங்களைச் ​சேர்ந்த 11 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி - தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்...
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...