வரும் 29 ஆம் திகதி முதல் குடிவரவு குடியல்வு திணைக்களம் புதிய இடத்தில்!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையிலுள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 10, ஆனந்த ராஜபகருண மாவத்தையிலுள்ள 41 ஆம் இலக்க பிரதான காரியாலயத்தினதும், கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்களினதும் 26 ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுமக்கள் சேவை இடம்பெற மாட்டாது என திணைக்களம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி சாதாரண கடவுச் சீட்டு விநியோக சேவை, வீசா விநியோக சேவை, வெளிநாட்டு கடவுச் சீட்டு சீர்திருத்தம், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டதாகவே இடம்பெறும் எனவும் கடவுச் சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை நடைபெற மாட்டாது எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது
Related posts:
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்!
38 வேட்பாளர்கள் உட்பட 342 பேர் கைது
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேய...
|
|