வரும் 03 ஆம் திகதி முதல் மஞ்சள் கடவைகள் வெள்ளைக் கடவைகளாக மாறுகின்றன!
 Monday, November 21st, 2016
        
                    Monday, November 21st, 2016
            
பாதையை கடக்கும்போது பயன்படுத்தப்படும் மஞ்சட் கோட்டு கடவைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் அவற்றை வெள்ளை நிறத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இலங்கையிலுள்ள அனைத்து பாதைகளிலும் உள்ள மஞ்சட் கடவைகளும் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்ததோடு, இந்நிகழ்வு அனைத்து மாகாணங்களிலும் விசேட நிகழ்வாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வெள்ளை நிறம் மிகவும் தெளிவாக தென்படக்கூடியது என்பதோடு, விசேடமாக இரவு நேரங்களில் மிகத் தெளிவாகத் தென்படும் என்பதே, உலகளாவிய ரீதியில் பாதசாரிகள் கடவைகள் வெள்ளை நிறத்தில் பேணுவதற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
தரிசு வயல்களில் தெங்கு செய்கையை முன்னெடுக்க அனுமதி!
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது -  ஜனாதிபதி ரணில் ...
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        