வருடாந்தம் 55 லட்சம் பேர் உயிரிழப்பு: காரணம்?

Saturday, September 10th, 2016

காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உலகளவில் 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது.

உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர். காற்று மாசு காரணமாக இந்தியாவில் 2013 ம் ஆண்டில் மட்டும் 14 லட்சம் பேர் இறந்துள்ளனர். சீனாவில் மிக மோசம் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1488632001wind

Related posts:

நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக்கொடுப்பனவு இல்லை - தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்ப...
கடும் எரிபொருள் நெருக்கடி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அன...
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் - உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்...