வருகிறது விபத்துக்களின் போது உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு திட்டம் – வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர்!
Sunday, January 28th, 2018
திடீர் விபத்துக்களின் போது, உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்காக நாடு முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்துக்களில் உயிரிழப்போர் பெரும்பாலும், குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பத் தலைவர்களாவர். இவர்களது மறைவு காரணமாக, அக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, உதவும் பொருட்டு, நாழுதழுவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளது என்று வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட கூறினார்.
Related posts:
கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க நடவடிக்கை ...
பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


