வருகிறது இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் ஒழுக்க விதிகள்!
Wednesday, November 24th, 2021
1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளுர் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கும் பொதுமக்களுக்குத் தேவையான அரிசியை தட்டுப்பாடுகளின்றி இலகு விலையில் விநியோகிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டு கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த ஒழுங்கு விதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


