வரியிறுப்பாளர் நலன் கருதி யாழ்.மாநகர சபை வார இறுதி நாட்களிலும் ஆதனவரி அறவீடு!
Friday, January 27th, 2017
வரியிறுப்பாளர் நலன் கருதி நாளை சனிக்கிழமை மற்றும் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் ஆதனவரி அறவீட்டு நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதால் நடப்பாண்டுக்கான (2017) ஆதன வரியை ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10வீத கழிவினையும் அவ்வாறு செலுத்த முடியாதவர்கள் காலண்டுகளிற்கான ஆதன வரியை அக் காலாண்டின் முதல் மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் கழிவினை பெற்றுக்கொள்ளுமாறும் இதுவரை ஆதனவரி அறிவித்தல் கிடைக்கப்பெறாதவர்களும் தமத வட்டாரம், ஆதன இலக்கம் என்பவற்றினை நேரடியாக வரி செலுத்துமிடத்தில் கூறி வரியினை செலுத்த முடியும் எனவும் யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

Related posts:
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவ...
தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு - கல்வி அமைச்சு - மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடைய...
இன்றுமுதல் ஜூன் 01 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: பிரகடனம் - இம்மாதம் மாத்திரம் 9 பேர் மரணம்!
|
|
|


