வரட்சியினால் திருகோணமலையில் 5,214 குடும்பங்கள் பாதிப்பு!
Thursday, January 19th, 2017
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 24 கிராமங்களைச் சேர்ந்த 5,214 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பாக கலந்துiயாடுவதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை நிவர்த்தி செய்வதுடன் இனி அதிகரிக்கவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட ரீதியாக 6 நீர் பௌசர் லொறிகளும் 42 நீர் பௌசர் டெக்டர்களும் 469 பிளாஸ்ரிக் நீர் தாங்கிகளும் தேவையாகவுள்ளது. அதனை தமது அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


