பிரசன்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
Thursday, September 7th, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரின் மனைவிற்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக உத்தரவிட்டார்.
அதன்படி , இம்மாதம் 9ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை வெளிநாடு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேல்மாகாண முதலமைச்சராக இருந்த சமயம் , மீதொடமுல்லை பிரதேசத்தில் இடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக , 64 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டது தொடர்பிலான வழக்கில் இவர்கள் வெளிநாடு செல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 6,065 நாய்களுக்கு தடுப்பூசி!
நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் வெளியேற முடியும் - இலங்கை பணியாளர்களுக்கு சலுகையளித்தது சவுதி!
இலங்கையின் பொருளாதார மீட்சி சவாலாகவே உள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ...
|
|
|


