10 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

Monday, December 12th, 2016
நாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரவதால் இதனை முற்றாக ஒழிப்பதற்காக இன்று முதல் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டமொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையணியினை தேவையான வகையில் பயன்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டதை நடைமுறைப்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது. இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் கேட்டுக் கொண்டார்.

டெங்கு நோய் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் வகையில் இந்த பத்து மாவட்டங்களிலும் 30 சுகாதார வைத்திய பிரிவுகளின் பணியாளர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு மேலதிகமாக டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு 25 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் இந்த மதிப்பீட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கட்டமைப்பை துப்பரவு செய்யும் நடவடிக்கை திருப்திகரமாக இடம்பெறுவதில்லை. இதற்காக முறையான வேலைத்திட்டத்தை பாடசாலை அதிபர்கள் மேற்கொள்வதற்கு தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Untitled-1 copy

Related posts: