வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு தூர இடம் செல்லும் கோணாவில், அறிவியல் நகர் மக்கள்!

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோணாவில் பகுதியிலுள்ள மக்கள், தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கரைச்சிப் பிரதேச சபையில் கீழுள்ள கோணாவில், அறிவியல் நகர், உத்திரபுரம், செருக்கன் ஆகிய பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோணாவில் கிழக்கு பகுதியில் சுமார் 240 குடும்பங்கள், தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. “குடிநீரைப் பெற்றுப்கொள்வதற்கு மிக நீண்ட தூரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளதுடன், மீள்குடியேற்றத்தின் பின்னர் அமைக்கப்பட்ட பொதுக்கிணறுகள், தண்ணீரின்றிக் காணப்படுகின்றன”.
என மக்கள் தெரிவிக்கின்றனர். “எமக்கான குடிநீரை வழங்குமாறும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை”. எனவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். எதிர்காலத்தில் நீர்த்தாங்கியொன்றை அமைத்து அதன்மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உறுதியளித்துள்ளது. எனினும், தற்போது நாம் எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை. என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|