நாட்டின் விவசாயத்துறையில் அதிகளவில் மாற்றத்தை இவ்வாண்டு ஏற்படுத்தும் – ஜனாதிபதி

Monday, January 2nd, 2017
பிறந்துள்ள புத்தாண்டு நாட்டின் விவசாயத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமாகும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாளை ஆரம்பமாகும் ‘நிலையான யுகத்தின் மூன்று வருட ஆரம்பம்’ என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து விவசாயத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து விவசாயிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.  பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்களுடன் நேற்று பொலன்னறுவையில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகள் குறித்து அங்கு ஜனாதிபதி கவனம் செலுத்தினார். எதிர்கால அபிவிருத்தித் திட்டத்திற்கமைய இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் விவசாய பருவகாலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது  கவனம் செலுத்தப்பட்டது.

images (6)

Related posts: