வயோதிபரை பலியெடுத்த கார் பொலிஸாரிடம் சிக்கியது!
Tuesday, July 26th, 2016
கடந்த ஞாயிற்றுகிழமை இரவு கல்வியங்காடு பகுதியில் வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி மரணத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற காரை நேற்று (25) கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியங்காடு பகுதியில் இரவுவேளை வீதியில் சென்ற வயோதிபர் ஒருவரை காரினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு காரில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். விபத்துக்குள்ளான வயோதிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் குறித்த வயோதிபர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிசார் விபத்துக்கு காரணமாக காரினை கைப்பற்றியுள்ளதுடன் , காரின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
Related posts:
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக உயர்வு!
ஆகஸ்ட் 7 இல் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு செய்யப்பட வாய்ப்பு!
பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புத...
|
|
|


