வட்டுக்கோட்டையில் திருட்டு!
 Thursday, August 20th, 2020
        
                    Thursday, August 20th, 2020
            
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீட்டில் இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் கூரை ஓட்டினை கழட்டி உள்நுழைந்த திருடர்கள் நகைகளை திருடி உள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
Related posts:
கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!
ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் -  போக்குவ...
அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் - அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        