வடமாகாண விவசாயக் கண்காட்சி ஆரம்பமானது!

வடமாகாண விவசாயக் கண்காட்சி யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது. “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப் பொருளில் குறித்த கண்காட்சி இடம்பெறுகிறது.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில் மத்திய விவசாயத் திணைக்களத்தின் பிரிவுகள், வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு திணைக்களங்கள், விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சி எதிர்வரும்-23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நான்கு தினங்கள் காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை நடைபெறவுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
ஐ.நா மனித உரிமை விவகாரம்! முறையாக எதிர்கொள்வோம் - அரசாங்கம் உறுதி!
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவி...
|
|