வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பரா வெளிச்சக் குண்டு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையை அண்டிய பற்றைக் காடு உள்ள பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பரா வெளிச்சக் குண்டு ஏவி விடப்பட்டமையினால் சிறிது நேரம் அப் பகுதியில் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரா வெளிச்சக்குண்டு ஏவி விடப்பட்டு அவ் வெளிச்சத்தினூடாக கடத்தல் படகுகளிற்கு வழி காட்டப்பட்டதா என்ற கோணத்தில் உடனடியாக தீவிர தேடுதல் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் போர்க் காலத்தில் கைவிடப்பட்ட பரா வெளிச்சக் குண்டாக இது இருக்குமா என்ற கோணத்தில் ஆராயப்பட்டபோதும் ஏவப்பட்ட குண்டின் எஞ்சிய பகுதிகள் அது புதிதாக இருப்பதை அடையாளப்படுத்துவதால் சந்தேகம் கொண்டு தேடுதல் இடம்பெற்றது.
இருந்தபோதும் பரா வெளிச்சக் குண்டை ஏவியவர்கள் தொடர்பிலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனாலும் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|