வடக்கு மாகாணத்துக்கு 9 தாதியர்கள்!

Friday, September 22nd, 2017

 

 

வடக்கு மாகணத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு 5 தமிழர்களும், 4 சிங்களவர்களும் பொது சுகாதார தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் கடந்த 18ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் பொதுச் சுகாதார தாதியர் பதவிகள் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ளன.குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் போன்றவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.பொது சுகாதார தாதியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து சுகாதார நிறுவனங்களில் தாதிய அலுவலர்களாக கடமையாற்றியோரிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. களுத்துறையில் ஒன்றரை வருடங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணத்துக்கு 9பேர் நியமிக்கப்பட்டனர்.வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்துக்கு மூவரும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு தலா இருவரும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா ஒருவரும் நியமிக்கப்டபட்டனர்.

யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை, கோப்பாய், சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: