வடக்கு- தெற்கை விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் – கல்வி இராஜாங்க அமைச்சர்!

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் அகில இலங்கை அஞ்சல் ஓட்டப்போட்டி இன்று ஆரம்பமானது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.வடக்கு தெற்கு உறவு ஒரு காலத்தில் சவால் மிக்கதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறுப்பட்ட பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இன மத மொழி பேதமின்றி பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!
சிறுதானியச் செய்கை அறுவடை!
கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் - இரா...
|
|