வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்க மதிப்பீடுகள்!

Sunday, June 3rd, 2018

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இதற்கமைய, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 276.94 ஏக்கர் அரசாங்கக் காணியையும், 144 ஏக்கர் தனியார் காணியையும் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 290 ஏக்கர் அரச காணியையும், 192 ஏக்கர் தனியார் காணியையும் விடுவிக்க ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கில் 735.15 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related posts: