வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு !
வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதற்கான சட்ட மூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரும்,அமைச்சரவை பேச்சாளருமான கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
யுத்தம், இனக்கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு படையினரின் குடும்பங்கள் என அனைவரும் இந்த அலுவலகத்தின் மூலம் நட்டஈட்டுக்குவிண்ணப்பிக்க முடியும்.
இந்த யோசனையை தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
Related posts:
ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது விவசாயிகள் கூட்டமைப்பு!
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|
|


