வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Thursday, December 10th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் - 3 ஆயிரத்து 215 சந்தேக இதுவரை நபர்கள் கைது!
மந்தகதியில் யாழ் மாவட்ட பொலிசாரின் செயற்பாடுகள் - நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு - பொல...
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ...
|
|
|


