வடக்கின் முதல்வருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

Saturday, April 23rd, 2016
நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் செயற்படுவதாகக் கூறியும் உடனடியாக இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரிக்குமாறு வலியுறுத்தியும்  பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.
பொலிஸார் விசாரிக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் வரையில் சென்று முறையிடுவதாகவும்   சிங்கள  அமைப்புகளை ஒன்றிணைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவதாகவும் எச்சரித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகள் மொழிசார் பிராந்தியங்களாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் மலையக தமிழ் மக்களின் பிராந்தியங்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் அதனை கண்டிக்கும் வகையில்  பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய  அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன.

Related posts: