வடக்கின் கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் உதவி!

மனித உரிமைகளைப் பேணும் திட்டத்தின் பிரகாரம் இலங்கையின் வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேஸ் என்னும் நிறுவனத்திற்கு 634860 அமெரிக்க
டொலர்களையும்,
மன்னார், வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மெக் என்னும்
நிறுவனத்திற்கு 603143 அமெரிக்க டொலர்களையும் ஜப்பான் அரசாங்கம் வழங்க உள்ளது.
இதேவேளை, இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை துரித கதியில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் குடிநீரினை பாவிக்கவும் !
நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
புதிய அரசாங்கம், கட்சி எடுக்கும் எந்தத் தீர்மானத்துக்கும் உடன்படுவேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ...
|
|