ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளர் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையா இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தமைக்காக ரஷ்ய தூதருக்கு ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனில் ஐ ஷ்கோடா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக செயலாளர் பிபிஎஸ்சி நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாண் விநியோகத்தில் கொரோனா பரவும் அபாயம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை - மைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
|
|