ரயிலில் மோதி நபரொருவர் பலி – அரியாலையில் சோகம்!
Sunday, February 7th, 2021
யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களிலில் சென்றுகொண்டிருந்த குறித்த நபர், பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் என்ற 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் - இலங்க...
சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிங்கப்பூர் நிபுணர்களை !
வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வ...
|
|
|


