ரயிலில் பயணிக்க யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை – யாழ்.தொடருந்து நிலையம் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2017

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடருந்து போக்குவரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மக்கள் தொடருந்துப் பயணத்தை விரும்புவது குறைவு. என யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீடம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் குளிரூட்டிய நாகர்சேர் கடுகதி தொடருக்கான ஆசனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே முற்பதிவு செய்யப்பட்டன. வழமையாக குளிரூட்டப்பட்ட சொகுசு தொடருந்தின் ஆசனங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னரே முற்பதிவுகள் செய்யப்படும்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் ஒரு மாத காலத்திற்கு முன்னரே குளிரூட்டிய நகர்சேர் கடுகதி தொடருந்து ஆசனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதிவரை முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய தொடருந்தின் ஆசனப் பதிவுகள் நாளை மறுதினம் வரை முற்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பதிவுகளில் அநேகமானவை வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்தவர்களாவர். விடுமுறையை யாழ்ப்பாணத்தில் கழித்து விட்டு தமது பிரதேசத்துக்குத் திரும்பும் பயணிகளாகவே அவர்கள் உள்ளனர். என்று யாழ்ப்பாண தொடருந்து நிலைய பயணச்சீட்டு கருமபீடம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: