ரக்னா லங்கா நிறுவனத்தை கலைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி!

Wednesday, December 7th, 2016

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கழைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. கடந்த காலத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையின் கீழ் பொருளாதார கேந்திர நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய இராணுவத்தினரை அகற்றி நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பு தேவையின் நிமித்தம் அத்தகைய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இன்றைய சமாதான சூழ்நிலையின் கீழ் இத்தகைய பாதுகாப்பு சேவையை முன்னெடுப்பதற்கான தேவை காணப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தற்போது முன்னெடுத்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் , கரையோர பாதுகாப்பு தொடர்பான கடற்படையினருக்கும் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RAllraknalanka-626x380

Related posts: