யுத்தத்தில் நாம் வெற்றி கொண்ட போதும் சமாதானத்தில் வெற்றிபெற தவறிவிட்டோம்!

Wednesday, March 16th, 2016

யுத்தத்தை வெற்றி கொண்டபோதிலும் சமாதானத்தில் வெற்றிபெறுவதற்கு கடந்த அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள நல்லிணக்க அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற “தேசிய நல்லிணக்கத்திற்காக ஊடகங்களின் கூட்டுப்பணி” நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் அதன் பிரதிபலனாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனை நடைமுறைப்படுத்தி செல்வதற்கும் முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய காலங்களில் அதிகாரிகளினால், இனங்களுக்கிடையில் மனமுறிவு மற்றும் ஒற்றுமையின்மையை வளர்ச்சியடையச் செய்வதற்காக ஆதரவு வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது என்று சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை விருத்தி செய்வதற்கு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, கல்விக்காக என செய்ய வேண்டிய பணிகள் பாரிய அளவில் இருப்பதாகவும், அபிவிருத்தியின் ஊடாக அதற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று அண்மையில் தான் உள்ளிட்ட குழுவினருடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

Related posts:


மத்தியிலிருந்து  தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாகத்  தரப்படுகின்றனவாம்: சொல்கிறார் வடக்க...
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபைய...
மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!