மத்தியிலிருந்து  தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாகத்  தரப்படுகின்றனவாம்: சொல்கிறார் வடக்கின் முதல்வர்!

Friday, May 20th, 2016

குறிப்பாக மத்தியிலிருந்து  தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாகத்  தரப்படுகின்றன. எம்முடன் கலந்துரையாடி எமக்கான வேலைத் திட்டங்களைத் தராமல் இருப்பதே  பெரும் குறையாக இருக்கின்றது.

13வது திருத்த சட்டத்திலிருக்கும் குறைபாடுகளை எடுத்துக் கூறியுள்ளேன். இதன் மூலம் எமது உறவுகள் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் ஸ்தானிகருடனான சந்திப்பின் போது சுட்டிக் காட்டியிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (19-05-2016) யாழ்.குடாநாட்டிற்கு வருகை தந்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் ஸ்தானிகர் டேவின் டலி  யாழ் மாவட்டத்தில் பல்வேறு அரச சிவில் தரப்புக்களைச்  சந்தித்துக் கலந்துரையாடிய பின் யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் வாசஸ்தலத்துக்கு விஐயம் செய்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாணமும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற எண்ணம் இருக்கின்றது. அதற்குத்  தடையாக இருப்பது என்ன? என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் ஸ்தானிகர் டேவின் டலி என்னிடம் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக மத்தியில் இருந்து தரப்படும் வேலைத்திட்டங்கள் தான்தோன்றித்தனமாக தரப்படுகின்றன. எம்முடன் கலந்துரையாடி எமக்கான வேலைத் திட்டங்களை தராமல் இருப்பதே பெரும் குறையாக இருக்கின்றது எனக் கூறியிருந்தேன். அத்துடன் வடமாகாணத்தில் நிலவும் வீட்டுப் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினேன்.

ஐக்கிய இராச்சியத்தினால் இருபதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. மேலும் மூவாயிரம் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 2.1 மில்லியன் பாவிக்கப்படுவது குறித்து தமக்கு புரியவில்லை எனவும் , ஏனெனில், தமது அரசாங்கத்தினால் தசம் 25 மில்லியனுக்கு தரமான வீட்டினை கட்டி முடித்துள்ளதாகத் தெரிவித்தார். எனவும் கூறினார் .

 

 

Related posts:


யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அனுசரணைகளுடன் இரண்டுவகை வீட்டுத்திட்டங்களை அமைக்கும் பிரதமர் மஹிந...
பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!