யாழ்.வலய மாணவர்களுக்கு இன்று வவுச்சர்கள் வழங்கப்படும்!

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைக்கான வவுச்சர்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்படும். நல்லூர் மற்றும் யாழ்ப்பாணக் கோட்ட பாடசாலைகளுக்கான சீருடை வவுச்சர்கள் அந்தந்தக் கோட்டக் கல்வி அலுவலகத்திலும் கோப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கான வவுச்சர்கள் யாழ்.கல்வி வலயத்தின் கணக்காளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும். இன்று காலை 9மணி தொடக்கம் 11மணிவரை வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் அதிபர்கள் தமது உத்தியோகபூர்வ றபர் முத்திரையுடன் வருவதுடன் பொறுப்பான ஆசிரியரையும் வருகை தருமாறும் கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமை...
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இவர்களே காரணம் - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்ப...
உடைகின்றதா இலங்கை தமிழரசுக் கட்சி - தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது - கட்...
|
|