யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண நியமனம்!
Sunday, May 22nd, 2016
யாழ்.மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய ஜி.கே.பெரேரா இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். அத்துடன், யாழ். மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண நியமனம் பெற்றுள்ளார்.
கடந்த ஒரு வருடகாலமாக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய இவர் அதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மேல்மாகாண, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது வருடாந்த பணிநிலை இடமாற்றம் பெற்று கொழும்பு பொலிஸ் வாகனப்பிரிவின் பொறுப்பதிகாரியாக சென்றுள்ளார்.
மேலும், தற்போது புதிதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியேற்கவுள்ள சஞ்ஜீவ தர்மரட்ண இதுவரை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தார்.இதேவேளை, கடந்த ஒருவருடமாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.ஜெயலத் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்
Related posts:
|
|
|


