சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Wednesday, February 9th, 2022

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வதத்த ய...
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் - வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் ...
சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில்...