யாழ்.மாவட்டச் செயலகம் முன்னுள்ள குப்பைத் தொட்டிகளால் பெரும் சுகாதாரக் கேடு!

யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் துர்நாற்றம் வீசுகின்றது. வீதியில் செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவுகளைச் சேகரிப்பதற்காக யாழ்.மாநகர சபையினால் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பைத்தொட்டிகள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. அவற்றுக்குச் சீரான கதவுகள் இல்லை. கழிவுகளைக் கட்டாக்காலி நாய்கள் இழுத்து விட்டு வீதியில் பரவுகின்றன. அந்தப் பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகின்றன. தற்போது பெய்த மழையால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டிகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குப்பைத் தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். யழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பான உள்ள குப்பைத் தொட்டிகள் தினமும் சுத்திகரிக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் வரையறுக்கப்பட்ட சேவையின் காரணமாகச் சில வேளை கழிவுகள் அகற்றப்படாதிருக்காலம். இது தொடர்பாக கவனம் எடுக்கப்படும். என்று யாழ்.மாநகர வபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|