யாழ்.மாவட்டத்தில்  உருளைக்கிழங்குச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!

Tuesday, December 20th, 2016

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் இம்முறை உருளைக்கிழங்குச்  செய்கையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை,வசாவிளான்,  தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, ஆவரங்கால்,  இணுவில், மருதனார்மடம் உள்ளிட்ட  பகுதிகளில்   சுமார் 210 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசி,றெட்லசோடா,அனோவா போன்ற மூன்று ரக உருளைக்கிழங்கு விதை இனங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்காக மத்திய அரசின்  தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் ஊடாக 22.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

unnamed (2)

Related posts:

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எ...
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில்...
சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் - நிதி இர...