யாழ்.மாவட்டச் செயலகத்தில் வருடத்தின் முதல் நாள் வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வு !

2017 ஆம் ஆண்டு நேற்று உதயமாகியுள்ள நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது வேலை நாளினை வரவேற்று ஆரம்பிக்கும் முதல்நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(02) காலை யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் “பிறந்திருக்கும் இவ்வாண்டு இலங்கையில் வறுமையிலிருந்து மீட்கும் நிகழ்ச்சி திட்டத்திற்காக ஆளணியினர் அனைவரினதும் பங்களிப்பினை வழங்குவோம்” என இந்த நிகழ்வின் போது அரச அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை, இவ்வாறான நிகழ்வு யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திண...
புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
|
|