உண்மையைக் கண்டறிய மற்றுமொரு பொறிமுறை அமைச்சரவை அனுமதிக்கு விரைவில் நடவடிக்கை!

Friday, March 31st, 2017

ஜெனீவா யோசனைகளின் அடிப்படையில் இறுதிக் கட்டப் போர் தொடர்பான உண்மைத் தகவல்களை கண்டறிய மிக விரைவில் பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அந்தக் கட்டமைப்பு எந்த வகையிலும் உருவாக்கப்படும் அதன் செயற்பாடுகள் என்ன என்பவை குறித்து இதுவரை எந்தவித முன்கூட்டிய முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், அரசாங்கம், ராணுவம் மற்றும் தமிழ்தரப்பு ஆகியன கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ள உள்ளார். என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளுடனான போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக் பொறிமுறையொன்றை உருவாக்கி நியாயத்தை நிலை நாட்ட மேலும் 2 வருட கால அவகாசம் கோரிய இலங்கையின் வேண்டுகோள் அண்மையில் ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 47 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக இலங்கையின் கோரிக்கை தொடர்பில் ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: