யாழ். மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் குறைவு !
Friday, May 18th, 2018
யாழ் மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13 பேரே டெங்கினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர். அத்துடன் இந்த மாதத்தில் கடந்த இரு வார காலப்பகுதியில் மட்டும் மூன்று பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புள்ளி விபரங்களின்படி மாநகர பிரதேசத்தில் இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போதைய கடும் வெயிலின் வறட்சியான காலநிலையின் தாக்கத்தினால் இதன் தாக்கம் திடீரென குறைந்து செல்கிறது. ஆனாலும் டெங்கின் விழிப்புணர்வு மற்றும் அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
கால்நடை ஆராய்ச்சி பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|
|


