யாழ்.மாநகர பகுதி குளங்களை புனரமைக்கும் அய்வுத் திட்டம்!

Saturday, December 3rd, 2016

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாநகரப் பகுதியில் உள்ள குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னோடியாக இதுவரைக்கும் 25 குளங்கள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநாகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

மாநகர எல்லைக்குள் காணப்படும் 44 குளங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின பனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் மாநாகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் உதவியுடன் இந்த குளங்களின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குளங்களின் நீரை எதிர்காலத்தில் ஆய்வுக்கு உட்டுபடுத்தும் நோக்கில் குளத்திற்கு அருகில் கண்காணிப்பு குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்பு குழாய் கிணறு ஊடாக குளத்தின நீர் மாதிரி பெறப்பட்டு ஆய்வுசெய்யப்படவுள்ளது.

1380086602jaffna-municipal

Related posts: