யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரம்!

யாழ். மாநகர சபையின் எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் வெள்ள வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட வசதியாகவே வெள்ளம் தேங்கிய வாய்க்கால்களை யாழ். மாநகர சபை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. வாய்க்கால்களில் காணப்படும் கழிவுப் பொருட்கள், செடிகள், பற்றைகள் என்பனவே வெட்டி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ். நகரப் பகுதியினுள்ளும், நகரை அண்டிய புறநகர்ப் பகுதியினுள்ளும் உள்ள வெள்ளம் தேங்கிய வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!
இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்...
|
|