யாழ்.மாநகர சபைக்கு தீபாவளி வருமானம் ரூ.22 லட்சம்!
Saturday, November 5th, 2016
தீபாவளிப்பண்டிகைக் கால நடமாடும் வியாபாரிகள் மூலம் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு இம்முறை ரூ.22 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகைக்காக மாநகர பிரதேசத்தினுள் பிற மாவட்ட வர்த்தகர்கள் நடமாடும் வியாபாரத்தை மேற்கொண்டனர். அதற்குக் கட்டணம் அறவிடப்பட்டது. அதன் மூலமாகவே 22லட்சம் ரூபா கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளிப் பிரதேசத்தில் குறித்த நடமாடும் வர்த்தகம் சுமார் நான்கு நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புத்தாண்டு சுபநேர பத்திரம் – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
கொரோனா வைரஸ்: அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் - மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!
|
|
|


