யாழ். மாநகரப் பகுதியில் மாத்திரம் இம் மாதம் 68 பேருக்கு எதிராக டெங்கு வழக்குத் தாக்கல்!

யாழ். நகரப் பகுதியில் இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டில் இதுவரை 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையச் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் யாழ்.பொலிஸ் நிலையச் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவினரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடாத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 22 ஆம் திகதி வரை மாத்திரம் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையச் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச் சாட்டின் பேரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்...
எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|