ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு !

Friday, April 10th, 2020

ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்   முறைகேடுகள் மற்றும்  நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும்  ஆறு  மாதங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த உத்தியோகபூர்வ காலம் நிறைவடைய இருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம்  திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையின் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள மினுவாங்கொட - 8000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு - இ...
ரிஷாட் பதீயுதீனின் கைதை தொடர்ந்து அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது - ...
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!