யாழ். மாநகரப் பகுதியில் டெங்கு தாக்கம் குறைவு!

Thursday, January 5th, 2017

யாழ்.மாநகரப் பதியில் 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் டெங்கின் தாக்கம் குறைந்து காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2016ஆம் ஆண்டில் 276பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டனர். 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 532 பேர் டெங்கின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர். அரைவாசி மடங்கிலானோர் கடந்த ஆண்டு டெங்கின் தாக்கத்தினால் குறைந்தும் காணப்பட்டனர். என்றாலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இதன் தாக்கம் திடீரென அதிகரித்துக் காணப்பட்டன.

வண்ணார்பண்ணை பிரதேசத்தில் இதன் தாக்கம் சற்று அதிகரித்துள்ளன. சீனியர் லேன், இந்துக்கல்லூரி வீதி, அரசடி வீதி போன்ற இடங்களில் இத் தாக்கத்தினால் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தற்போது தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான புகை அடிக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

dengu_1

Related posts: