சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
Sunday, August 29th, 2021
சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையிலேயே அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு வந்த சினோபார்ம் தடுப்பூசியின் 3 இலட்சம் டோஸ்களை நன்கொடையாக வழங்கிய சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி.
இலங்கையில் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்ய பெறப்பட்ட உதவிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து பாதாள உலகக் கும்பல்களும் அழிக்கப்படும் - பொலிஸ்மா அதிபர்!
பிறப்புச் சான்றிதழில் மாற்றம் - இலங்கை அடையாளத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!
ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல...
|
|
|


