யாழ்.மாநகரப் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டில்!

யாழ்.மாநகர பிரதேசத்தில் தொடர்ந்தும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுற்றாடல்களில் நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட 7 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதனைவிட நுளம்பு பெருகுவதற்கு வசதியாக சுகாதாரம் இன்றி காணப்பட்ட 14 குடியிருப்புகளுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளன. வண்ணார் பண்ணை றக்கா வீதி போன்ற பிரதேசங்களில் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்பகுதியில் சுமார் 523 வரையிலான வீடுகள் தரிசிக்கப்பட்டன.
Related posts:
வற் வரி சம்பந்தமாக புதிய தீர்மானம்!
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!
எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை - அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|