யாழ். மணியம் தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவினுள் கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேகநபர் கைது!
Sunday, November 20th, 2016
யாழ். மணியம் தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவினுள் கஞ்சா செடியை வளர்த்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இரண்டாம் குறுக்குத்தெரு மணியம் தோட்டம் யாழ்ப்பாணம் எனும் முகவரியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்
குறித்த நபர் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகளான சிறிகஜன், சொருபன், மற்றும் ஜெயத் ஆகிய மூவரும் குறித்த வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்ததுடன், கஞ்சாச் செடிகளையும் கைப்பற்றினர்.

Related posts:
மட்டுவிலில் வீடொன்றின் மீது சரமாரியாக தாக்குதல் - பதற்றத்தில் பிரதேச மக்கள்!
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானிய...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!
|
|
|


