யாழ்.பொலிஸாரிடம் சிக்கிய போலி சாரதிப் பயிற்சியாளர்!

Saturday, March 4th, 2017

சாரதிப்பயிற்சி வழங்குவதற்குரிய அனுமதிப்பத்திரமின்றி சாரதிப் பயிற்சியளித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸாரால் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சாரத்திய பயிற்சி வழங்கும் வாகன பயிற்சி பாடசாலைகளின் பயிற்றுநர்கள் உரிய அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளனரா என்பது தொடர்பாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் கடந்த வாரம் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் பயிற்றுநர் அனுமதிப்பத்திரமில்லாமல் சாரத்தியப் பயிற்சியளித்த போலிப் பயிற்சியாளர் ஒருவர் பொலிஸாரிடம் வகையாகச் சிக்கினார். இவருக்கெதிராக யாழ்.நீதிமன்றில் வழங்குத்தாக்கல் செய்யப்பட்டது, நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிவான் ச.சதீஸ்வரன் குறித்த நபருக்கு 4ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

driver

Related posts: