யாழ்.பல்கலை. மாணவர் மோதல்சம்பவம்: சாமாதனமாகச் செல்ல இரு தரப்பும் இணக்கம்!

Saturday, December 3rd, 2016

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள, தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை இணக்கமாக தீர்ப்பதற்கு மாணவர்கள் முன்வந்துள்ளனர். அது தொடர்பில் சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்திற்கு யாழ்.நீதிவான் மன்று அவகாசம் வழங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் 2 தரப்பிலும் சில மாணவர்கள் காயமடைந்ததுடன், மோதலில் ஈடுபட்ட சிங்கள, தமிழ் மாணவர்கள் 8பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கெதிராக 2 வழக்குகள் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு வழக்குக் குற்றப்பத்திரம் கோவையிடப்பட்டிருந்நது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றில் மாணவர்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் வழக்கில் இரண்டு தரப்பு மாணவர்களும் தற்போது முன்பைவிட அதிக அந்நியோன்னியமாக பழகுவதாகவும் இரண்டு வழங்குகளையும் சாமாதனமாக முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வழக்குகளில் ஒரு வழக்குக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாததல், மற்றய வழக்கில் பொலிஸாரை குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிவான் சி.சதீஸ்வரன் இந்த வழக்குகளை இம்மாதம் 8ஆம் திகதிக்கு விசாரணைக்கு நியமிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனக் கலைஞர்களை பங்கு கொள்ள வைப்பதற்கு சிங்கள மாணவர்கள் முயற்சித்த வேளையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது குறிப்பிடத்தக்கது.

newdd2

Related posts: