யாழ். பல்கலை நூலகத்தில் துன்புறுத்தல்!

Monday, July 25th, 2016

யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றி வரும் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல் நடவடிக்கைகளைக் கண்டித்து அங்கு கடமையாற்றிவரும் ஊழியர்களை இன்று 25.07.2016 திங்கட்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பல்கலை ஊழியர் சங்கம் வேண்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..

யாழ். பல்கலை நூலகத்தில் கடந்த 11.07.2016 அன்று சீருடை அணிந்து வரவில்லை எனக் கூறி பெண் தொழிலாளி ஒருவர் அலுவலக வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடாது தடுக்கப்பட்டுள்ளார்.அரசியல் நியமனத்தாரியான நூலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு தடுக்கும் செயற்பாட்டை செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊழியர் சங்கத்தால் நூலக உதவிப் பதிவாளர், பதிவாளர், உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது.அப்பெண் தொழிலாளியின் சீருடை சேலையாகும். 6 மாதக் கர்ப்பிணி என்பதால் சேலையை அணிவது இடைக்கு மறைப்பைத் தராது என அவர் கருதியதால், இடையினை மூடும் முழுமையான ஆடையொன்றினை அணிந்து வரும் போதே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணிப் பெண்ணை கையொப்பமிடாது தடுத்த ஊழியருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரியருகின்றது.

library

Related posts: